பொருட்களை திருடி தம் வசம் வைத்திருந்த நபருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

பொருட்களை திருடி தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மல்லம் குளம், புத்தளம் பகுதியை சேர்ந்த 32 வயதுடையவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த வருடம் வீடொன்றினுள் புகுந்து திருடியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு எதிராக திருட்டில் ஈடுபட்டமை மற்றும் திருடிய பொருட்களை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் கடந்த ஜனவரி மாதம் திருகோணமலை சிறைச்சாலையில் கைதியாக இருந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.