யாழ்ப்பாணத்தில் பறிபோயுள்ள யுவதியின் சங்கிலி

Report Print Sumi in சமூகம்

யாழ்.புங்கன்குளம் பகுதியில் யுவதியின் சங்கிலியை வழிப்பறித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

புங்கன்குளம், வில்வெந்தெரு வீதியில் நேற்று நண்பகல் யுவதி ஒருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் அறுத்துள்ளனர்.

அப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகள் அதிகமாக நடைபெற்றுவரும் நிலையில், இதுதொடர்பில் வடமாகாண முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை பொலிஸார் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எவற்றினையும் முன்னெடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வழிப்பறி மற்றும் போதைப்பொருள் பாவணையாளர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், இந்தப் பகுதிகளில் வீதி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.