இரண்டு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Report Print Satha in சமூகம்

ஹம்பாந்தோட்டை - சூரியவெவ, பெத்தேவெவ பிரதேசத்தில் நபரொருவர் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

65 வயதுடைய நபரொருவரே குறித்த பெண்ணை கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சந்தேகநபர் குறித்த பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையிலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் பின் சந்தேகநபர் தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.