பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தேடும் பணி முனைக்காடு பொது மயானத்தில்

Report Print Kumar in சமூகம்

காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தேடும் பணி மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பொது மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான் குளத்தை சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமை முடிந்து பொலிஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விசாரணைகளிலிருந்து காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் முனைக்காடு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்தே அப்பகுதியில் சடலத்தை தேடுவதற்கான அனுமதியை குற்ற புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.

இதன் பின் மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.ரிஷ்வான் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தந்த வைத்திய அதிகாரிகள், குற்ற புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் அங்கு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.