முல்லைத்தீவு செம்மலை பகுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு, செம்மலை கிழக்கு பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

செம்மலை கிழக்கு பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு அண்மையாக உள்ள களப்பு ஒன்றின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு குறித்த இளைஞரின் சடலம் இருப்பதை கண்ட சிறுவன் உயிரிழந்த இளைஞனின் வீட்டாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி, விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

குறித்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 2 வருடங்களுக்கு முன்னர் குறித்த இளைஞனின் சகோதரன் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.