அலுகோசு பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி

Report Print Steephen Steephen in சமூகம்

தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அரச சேவை தொடர்பாக விசேட பயிற்சியை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்றும் நாளையும் இந்த பயிற்சிகள் வழங்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

அரச சேவை கட்டமைப்பு மற்றும் தொழிலில் ஈடுபடும் அடிப்படை செயற்பாடுகள் தொடர்பாக இவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிகள் வெலிகடை சிறைச்சாலையின் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகின்றன.

அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள 26 பேருக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிகளின் பின்னர் இரண்டு பேர் அலுகோசு பதவிக்கு தெரிவு செய்யப்பட உள்ளனர்.