மாணவர்கள் மத்தியில் நிலை மாறுகால நீதி தொடர்பான கருத்து பறிமாற்ற நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மாணவர்கள் மத்தியில் இன ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் 'சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்' எனும் தொனிப்பொருளில் நிலை மாறு கால நீதி தொடர்பான கருத்து பரிமாற்ற நிகழ்வு இன்று மாலை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.

நாட்டில் இடம் பெற்ற கொடிய யுத்த சூழ்நிலை மற்றும் அண்மைக்காலமாக நாட்டில் இடம் பெற்று வரும் இன, மத முரண்பாடுகள் தொடர்பாக வெளிப்படையான கலந்துரையாடல் மூலம் மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் தேசிய சமாதான பேரவை உறுப்பினர்கள் , மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்க ஊழியர்கள் , மூம்மதத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவும் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers