வேப்பமரம் ஒன்றை வெட்டுவதற்கு அனுமதி கோரிய பௌத்த தேரர்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள வேம்பமரம் ஒன்றை வெட்டி அகற்றுவதற்கு பௌத்த தேரர் ஒருவரினால் அனுமதி கோரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயபகுதியில் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேப்பமரத்தின் வேர்களினால் கட்டடம் ஒன்றின் அத்திவாரத்திற்கு எதிர்காலத்தில் பாதிப்பு எற்படுத்தக் கூடும் என்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கரைதுரைப் பற்று பிரதேச செயலாளர் குறித்த கோரிக்கைக்கு அவ்விடத்தில் உடன்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.