கொழும்பு பிரதான வீதியின் யட்டியாந்தோட்ட பகுதியில் வீதி தாழிறக்கம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் யட்டியாந்தோட்ட நகரில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று வீதி தாழிறங்கியுள்ளதாக யட்டியாந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதான வீதி, வீதி அதிகாரசபையினால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருந்த வேளையிலேயே தாழிறங்கியுள்ளதாகவும், இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹட்டன், கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தபட்டுள்ளதாகவும், குறித்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழியினை பயன்படுத்துமாறும் பொலிஸார் சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய கொழும்பு, ஹட்டன் பழைய வீதியில் யட்டியாந்தோட்டை நகரிலுள்ள மணிகூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள விகாரையூடாக, சமன் தேவாலயம் வரை பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.