பேசாலை வைத்தியசாலையில் சுகாதார வலுவூட்டல் திட்ட ஆரம்ப நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

ஆரம்ப சுகாதார வலுவூட்டல் திட்டத்திற்காக மன்னார் மாவட்டத்தில் பேசாலை மற்றும் அடம்பன் வைத்தியசாலைகள் தெரிவாகியுள்ள நிலையில் குறித்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.காண்டீபன் தலைமயில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப சுகாதார வலுவூட்டல் அபிவிருத்தித் திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வேலைத்திட்டம் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சி குறித்த அபிவிருத்தித் திட்டத்தினூடாக வெளி நோயாளர் பகுதி கணினி மயமாக்கள், ஆய்வு கூடங்கள், பரிசோதனைகள், இன்னும் பல்வேறு வசதிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலையுடனான இணைப்புகள், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் 5 ஆண்டுத்திட்டமாக நடை முறைப்படுத்தப்பட உள்ளது.

இவ் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்திற்கென அடம்பன் மற்றும் பேசாலை வைத்திய சாலைகளில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் சிவசம்பு கணகாம்பிகை, மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers