Oops. Something went wrong. Please try again later
Desktop

புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணிகள் ஒத்திவைப்பு

Report Print Kumar in சமூகம்

2008ஆம் ஆண்டு ஆயுத குழு ஒன்றினால் கடத்தி சுட்டு கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகளை ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சிஜடி அதிகாரி என். நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 23ஆம் திகதி அனுமதிகோரியிருந்தார்.

இதனையடுத்து சடலத்தை இன்று மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிகள் இன்று மாலை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சடலத்தினை தோண்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த 2008ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கும் பணிகளே இடம்பெற்று வந்துள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில்,

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார்.

காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான (மகிளன்) மேரி அன்ரனி போல் அஜதீபன், (மதன்), தம்பிமுத்து செல்வராசா மற்றும் (லிங்கன்), சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் கடந்த மார்ச் மாதம் சிஜடி அதிகாரிகள் கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர்களை ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களிடம் மேற் கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக சிஜடி யினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக ஏழு பேர் இனங்காணப்பட்ட நிலையில் கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏற்கனவே இறந்துள்ளார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இனியபாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும் ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் எனப்படுபவர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சிஜடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers