கணேசபுரம் மக்களை நேரில் சென்று பார்வையிட்ட மஸ்தான் எம் பி

Report Print Theesan in சமூகம்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கணேசபுரம் கிராமத்தில் வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்களின் வீடுகளிற்கு சென்று அவர்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்துக் கொண்டுள்ளார்.

வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த சுமார் இருபதுக்கு மேற்பட்டவர்கள் நேற்றைய தினம் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு வருகை தந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துக் கொண்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொலைபேசி மூலமாக கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த கிராமமான கணேசபுரத்திற்கு சென்று வீட்டுத்திட்டம் வழங்கப்படாதவர்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், குடும்ப நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

இதேவேளை அம்மக்களுக்கான சமூர்த்தி திட்டம் மற்றும் கிராம வீதிகள் தொடர்பாகவும் கேட்டறிந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers