தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்களா?

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

மத்தியமுகாம் கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட தமிழ் கிராமங்கள் தொடர்ந்தும் அரசாலும், அரசில் அங்கம் வகித்த அமைச்சர்களாலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தப்படுவதாக தெரிவித்து எதிர்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் பொது மக்கள் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை - அம்பாறை சடயந்தலாவையூடான வீதி புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் கிராமமான மத்தியமுகாம் ஒரு பகுதியின் ஊடாக செல்லும் தார் வீதியானது இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவே கண்டனத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்தனர்.

மத்தியமுகாம் கல்முனை பிரதான வீதியின் மூன்று முஸ்லிம் கிராமத்திற்கான வீதிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் செப்பனிடப்பட்டு, தெருவிளக்குகளும் பொருத்தியும் உள்ளனர்.

இருப்பினும் தமிழ் கிராம எல்லையோடு குறித்த வேலை இடை நிறுத்தப்பட்டுள்ளமை முஸ்லிம் அரசியல்வாதிகளின் இனவாதப்போக்கை வெளிப்படுத்துவதாக அரசை குற்றம் சுமத்தினர்.

குன்றும் குழியுமாக காணப்படும் இவ் வீதியில் தினமும் வீதி விபத்துக்கள அதிகம் ஏற்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.விஜயசிங்க எதிர்புப்பு பேரணியை நிறுத்துமாறு கூறினார்.

தொடர்ந்தும் பொலிஸ் அதிகாரி அமைச்சர் அனோமா ஹமகேவுடன் தொடர்புகொண்டு விரைந்து தீர்வினை பெற்றுத்தருவதாக கல்முனை விகாராதிபதி சங்கரத்தின தேரர் அவர்களுக்குக்கு வாக்குறுதியழித்தார்.

இதன்போது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட மக்கள் நாவிதன்வெளி பிரதேசத்தில் ஒன்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தமிழ் கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதில் அசமந்தபோக்குடன் இருப்பதாகவும், பிரதான வீதியால் செல்லும் குடிநீர் குளாய்களிலிருந்து தமிழ் கிராமங்களுக்கு நீர் வழங்கப்படாது முஸ்லிம் கிராமங்களுக்கு நீர் வழங்கியுள்ளதால் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Latest Offers