இலங்கையில் அரேபிய முஸ்லிம்களாக எவரும் செயற்பட முடியாது! அஸ்கிரிய பீடம்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரேபியர்களாக செயற்பட கூடாது என அஸ்கிரிய பீட தம்மதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் அரேபிய முஸ்லிம்களாக இருக்க முயற்சித்தமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் நேற்று மல்வத்து அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகும் போது எங்களுடன் பேசவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இலங்கை கலாச்சாரத்தின்படி செயற்படாமல் அரேபிய கலாச்சாரத்திற்கு மாற முயற்சித்த போதே பிரச்சினை ஏற்பட்டது.

அரேபிய முஸ்லிம் கலாச்சாரம் என்றால் அரேபிய முறையில் ஆடை அணிதல், கட்டடங்கள் அமைத்தல், கலாச்சார நிலையங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினால் பிரச்சினை ஆரம்பித்தது.

அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்குள்ளான முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த நேரத்தில் நாங்கள் சரியாக தான் நடந்து கொள்கிறோம் என நாட்டிற்கு வாக்குறுதியளிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என அஸ்கிரிய பீடாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers