வெளிநாட்டிலுள்ள இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Report Print Satha in சமூகம்

வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களது பிள்ளைகளுக்கான புதிய கல்விசார் வசதிகள் முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களது பிள்ளைகள் அவர்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து எழுதுவதற்கான வசதிகளே இவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைவாக அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் உள்ள இலங்கையின் ராஜதந்திர அலுவலகத்தில் இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள தாம் அறிவுறுத்தி இருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.