ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம்

Report Print Satha in சமூகம்

இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய சேவையாளர் சங்க உறுப்பினர்கள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படாத நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்தா தலைமையகத்திற்கு முன்னால் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றமைக்கு எதிராக அவர்கள் உணவுத் தவிர்ப்பை ஆரம்பித்திருந்தனர்.

இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில், தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தவிருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.