வரலாற்று சிறப்பு மிக்க காட்டுவிநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தின் மூலஸ்தானம் சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளளது.

குறித்த நிகழ்வு ஆலய நிர்வாகத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் பதில் நீதிபதியுமான க.பரஞ்சோதி தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

காட்டு விநாயகர் ஆலயத்தின் வரலாறு மிக தொன்மை வாய்ந்தது. கி.மு.1506 ஆம் ஆண்டிற்கு முற்பட்டதும் ஆறாம் பரராஜ சேகர மன்னரால் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வழிபட்டதும், ஏழு நாட்கள் தொடர்ச்சியாக அணையா விழக்கெரியும் அற்புத புதுமையும் நிறைந்த முள்ளியவளை காட்டுவிநாயகர் திருத்தலத்தின் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பனிர் து.ரவிகரன் உள்ளிட்ட கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டு மூலஸ்தானம் அமைப்பதற்கு அடிக்கல்லினை நாட்டிவைத்துள்ளனர்.

Latest Offers