உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களைத் தேடி கோயம்புத்தூரில் சுற்றி வளைப்பு ?

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கையில் அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களைத் தேடி தமிழக மாநிலத்தின் கோயம்புத்தூரில் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய தேசியப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடனும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்களுடனும் தொடர்புடையவர்களை தேடி இவ்வாறு சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோயம்புத்தூரின் ஏழு இடங்களில் இவ்வாறு சுற்றி வளைப்புத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers