ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுதாக்குதலினால் சேதத்திற்குள்ளான கொச்சிக்கடை, புனித அந்தோனியார் ஆலயம் மீண்டும் மக்கள் பாவனைக்கென திறந்து வைக்கப்பட உள்ளது.
கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் ஆலயம் திறப்பு விழா இடம்பெற உள்ளது.
வருடாந்தம் ஜூன் மாதம் 13ஆம் திகதி கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, திருச்சுரூப பவனி இடம்பெறும்.
இவ்வருடம் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து, நாளை காலை 10 மணியளவில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி மாத்திரம் ஒப்புக்கொடுக்கப்பட உள்ளது.