தௌஹீத் ஜமாத் தொடர்பில் 2012இல் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே தேசிய தௌஹீத் ஜமாத் தொடர்பான எச்சரிக்கையை புலனாய்வு துறையினருக்கு விடுத்தேன் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் மொஹமட் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

2019 ஜனவரியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு சில புகைப்படங்களை ஒப்படைததேன்.

நபி அவர்கள் கற்றுக் கொடுத்த உண்மையான இஸ்லாமை நாங்கள் பிரசங்கித்தோம். ஆனால் சஹ்ரான் ஜம்மியத்துல் உலமாவின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தோடு அடில் என்பவர் தன்னை காபிர் என கூறினார்.

ஐ.எஸ். க்கு எதிராக பேசும் உலகின் முதல் முஸ்லிம் மத குருமார்களில் நானே ஒருவன். எங்கள் தாய்நாட்டை பாதுகாப்பதே எனது கடமை. 2014 ஜூலை 7, அன்று வானொலியில் எனது பேச்சு ஒளிபரப்பப்பட்டது. இது அளுத்கம தாக்குதல்களையும் ISIS பற்றியும் இருந்தது.

இதேவேளை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பேசும் பிக்குகளை நான் வெறுப்பதில்லை. அவர்களுடன் ஒரு உரையாடலை நடத்த நான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.