வவுனியாவில் தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - வேலங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களை பூவரசங்குளம் பொலிஸார் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று வவுனியா வேலங்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் உரப்பொதியில் சுற்றிகாணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு இன்று விரைந்த பூவரசங்குளம் பொலிஸார் குறித்த உரப்பொதியை சோதனை செய்து பார்த்தபோது ஐந்து கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்து சம்பவம் தொடர்பாக குண்டினை செயலிழக்க செய்வதற்காக விஷேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் குண்டுகளை செயலிழக்க வைத்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.