அனுமதி பத்திரத்துக்கு மேலதிகமாக ஆடுகளை ஏற்றி வந்த குடும்பஸ்தர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - தோப்பூர் பகுதியிலிருந்து, ஹொரவப் பொத்தானைக்கு அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக வாகனமொன்றில் ஆடுகளை ஏற்றி வந்த குடும்பஸ்தர் ஒருவரை திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை நீரோட்டு முனைப் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம், மிகிந்தலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சந்தேகநபரும், வாகனமும், சீனக்குடா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Latest Offers