மூதூர் பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துமாறு கோரிக்கை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மூதூர் பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துமாறு கோரும் மகஜர் ஒன்றினை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்கு மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.அரூஸினால் கையளிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் இது தொடர்பாக எமது செய்தியாளரிடம் இடம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மூதூர் பிரதேச சபையின் எல்லைப் பிரதேசம் மிக பரந்ததாகும். இதனுடன் 6 உப பிரதேச சபை அலுவலகங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் மக்கள் சனத்தொகை மற்றும் நகர சபைக்கான தரப்படுத்தலின் கீழ் தரமுயர்த்தப்பட வேண்டிய தகவல்களின் அடிப்படையில் இதற்கான தரமுயர்த்தலை மேகொள்ளுமாறும் அம்மகஜரில் வேண்டப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.