இம்ரான் மகரூப் எம்.பியின் கம்பெரலிய வேலைத்திட்டம் நடுஊற்று கிராமத்தில் ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேசத்தில், நடுஊற்று கிராம உத்தியோகத்தர் பிரிவில் பல கிரவல் வீதிகள் கொங்கிறீட் வீதிகளாக புனரமைப்பதற்கான முதற் கட்டப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் எம்.ஐ.எம்.பைஸரின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இதற்கென 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இவரது இந் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பின்வரும் வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிண்ணியா நடுஊற்று மவ்ரியத்துல் ஹசனாத் பள்ளிவீதி, நடுஊற்று வைத்தியசாலை வீதி, சுங்காங்குழி சுனாமி மீள் குடியேற்றத்திட்ட முதலாவது வீதியும் மக்களின் போக்குவரத்துக்காக கொங்றீட் வீதியாக மாற்றுவதற்கான முதற் கட்ட வேலைகள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக நடுஊற்று பிரதேச மக்கள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பிற்கு தமது நன்றியினைத் குறிப்பிட்டுள்ளனர்.