ஹட்டன் பிரதேசத்தில் ஹெரோயின் போதைபொருள் விற்பனை செய்யும் பிரதான சந்தேக நபர்கள் மூவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் பகுதியில் ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று பிரதான சந்தேக நபர்கள் இன்று மதியம் ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.

ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மூன்று சந்கேநபர்களும் கைதுசெய்யபட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து ஹட்டன் பகுதியில் இந்த ஹெரோயின் போதைபொருள் கொண்டு வந்து ஹட்டன் பகுதியில் விற்பனை செய்யபட்டுள்ளது.

பிரதான சந்தேகநபராக 24வயதுடைய திருமணமாகாத நோர்வுட் வெஞ்சர் தோட்டபகுதியை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 07 ஹெரோயின் பக்கட்டுகள் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹட்டன் சமனலபகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மேலும் இரண்டு ஹெரோயின் பக்கட்டுகளும் மேலதிகமாக இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யபட்டுள்ளதோடு, மொத்தம் மூன்று சந்கேநபர்களும் 09 ஹெரோயின் பக்கட்டுகளும் மீட்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஹட்டன் சமனலபகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் 25 தொடக்கம் 30 வரையிலான வயதினை கொண்டவர்கள் எனவும் இவர்கள் நீண்டகாலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கைதுசெய்யபட்ட மூன்று சந்தேகநபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக குறிப்பிட்ட ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.