இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வழமை போல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போக்குவரத்து சேவைகள் ஹட்டன், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இன்றும் வழமை போல் இடம்பெற்றுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் இன்று நாடுமுலுவதும் சேவையில் ஈடுப்படாது என அறிவுறுத்தல் வழங்கி இருந்த போதிலும் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளும் இன்றய தினம் சேவையில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நிலுவை பணம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பதவி உயர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இன்றய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத்தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - கண்டி, ஹட்டன் - பொகவந்தலாவ, மஸ்கெலியா, நுவரெலியா, தலாவகலை மற்றும் ஏனைய பகுதிகளுக்கான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.