தான் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளன் என்பதை பகிரங்கமாக அறிவித்த சஹ்ரான்

Report Print Jeslin Jeslin in சமூகம்

தான் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் என்பதை சஹ்ரான் ஹசீம் பகிரங்கமாக அறிவித்தார் என காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனநாயகம் இஸ்லாத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாதது என நாட்டின் இறைமை தொடர்பில் சஹ்ரான் ஹாசிம் கேள்வியெழுப்பினார்.

அத்துடன் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதைப் பகிரங்கமாக சஹ்ரான் ஹாசிம் அறிவித்தார்.

2017ஆம் ஆண்டில் சஹ்ரானும் அவருடைய ஆதவாளர்களும் வாள்கள், மற்றும் கத்திகளுடனும் இருந்த நிலையில் எப்படி இந்தளவு பாரிய ஆயுதங்களைப் பெற்றார்கள்? மிகவும் வறுமையில் இருந்த சஹ்ரான் ஒன்றரை வருடங்களில் எப்படி அவர் இந்தளவு நிதியைப் பெற்று பலமானவரானார் என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.