மக்களின் வழிபாட்டிற்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் திறப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் மக்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் புனர் நிர்மாணப்பணிகளின் பின்னர் இன்றைய தினம் ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளைய தினம் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.