சுகாதார அமைச்சருக்கு எதிராக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Ashik in சமூகம்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று பகல் ஒன்றுகூடிய வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் 30 நிமிடங்களாக நடைபெற்றுள்ளது.

இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட வைத்தியர்கள் வடக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா?, நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், எமக்கு எல்லாம் நாறல் மருந்து ராஜிதவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.