யாழில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மீது வாள் வெட்டு தாக்குதல்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் 9 பேர் அடங்கிய ஆவாக்குழுவொன்று, புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You my like this video


Latest Offers