நீதிமன்ற தீர்ப்பை மீறி இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

கடந்த ஏப்ரல் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி இலங்கை மின்சாரசபை மற்றும் மின்வலு மற்றும் சக்திவலு தொழிற்துறை அமைச்சு ஆகியன இணைந்து மீண்டும் இ.மி.ச பொறியியலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என நுகர்வோர் உரிமை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு எழுத்தாளர்களின் சங்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சங்கத்தின் இணைப்பாளர் கெலும் அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது,

2014 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையினால் அதன் பொறியியலாளர்களுக்கு மாத்திரம் விசேட சம்பள திட்டத்தை அறிமுகம் செய்து சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டது.

2014/gm/046 என்ற சுற்றுநிருபனத்தின் அடிப்படையிலேயே பொறியியலார்களுக்கான சம்பள அதிகரிப்பு 85 வீதம் அதிகரிக்கப்பட்டது.

இந்த சம்பளமானது மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் வழங்கப்படுகின்றது. எனவே இது சட்டவிரோதமானது என கூறி இலங்கை மின்சார பொது சேவையாளர் சங்கம் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பில் குறித்த சுற்று நிருபம் சட்டத்துக்கு முரணானது.

இது பொது மக்களின் பணம். எனவே இச்சுற்று நிரூபத்தை தடை செய்வதாக அறிவித்தது.

இருப்பினும் தற்போது அமைச்சரவை அனுமதியுடன் குறித்த சம்பள திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அமைச்சும்இ இலங்கை மின்சார சபையும் இணைந்து மீண்டும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதானது மக்களது பணத்தை முறைகேடான விதத்தில் பயன்படுத்தும் குற்றமாகும்.

அரசியல் தேவைகளுக்காக இ.மி.சவின் பொறியியலாளர்களை சந்தோஷப்படுத்தும் தேவையை விட மக்களது தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். அதேநேரம் பொறியியலாளர்களுக்கு மட்டும் தான் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய பணியாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்காது புறக்கணிப்பது ஏன்? இந்த சம்பள அதிகரிப்பால் 600 கோடி மேலதிக செலவை மக்களே செலுத்த வேண்டும். மின்சாரப்பட்டியலுடன் மேலதிகமாக 1000 ரூபாவை செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் வழங்கிய சம்பள உயர்வினால் இலங்கை மின்சார சபைக்கு 600 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் மின்சார பாற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இ.மி.ச பொறியியலார்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுகின்றார்கள். மக்களின் கவலையை பொருட்படுத்தாத இவர்களுக்கு ஏன் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டும்.

26 ரூபாவிற்கு மின்சாரத்தை பெறுவதாக மின்சார சபையும் அமைச்சும் கூறுகின்றது. உண்மையில் 35 ரூபாவிக்கு தான் மின்சாரத்தை பெறுகின்றார்கள். இது டீசல் மாஃபியா. இதனை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாட்டு மக்களை வீதிக்கு கொண்டுவந்து போராடவுள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers