அத்துரலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம்

Report Print Dias Dias in சமூகம்

கடந்த ஏப்ரல் 21ம் திகதி குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, அத்துரலிய ரத்ன தேரர் உட்பட இளைஞர்கள் குழுவினரும் சென்று குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தை பார்வையிட்டதுடன், தேவாலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை அத்துரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்திற்கும் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.