தௌஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் பிணையில் விடுதலை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நபரை பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் இன்று சந்தேகநபரை ஆஜர்ப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் திருகோணமலை ஜமாலியா பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பயங்கரவாத செயற்பாடுகள் எதிலும் சம்பந்தப்படவில்லை என நீதிமன்றத்திற்கு பொலிஸாரின் அறிக்கை கிடைக்கப் பெற்றதையடுத்து பிணையில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest Offers