சிசேரியன் சத்திர சிகிச்சை விவகாரம்! வைத்தியர் ஷாபிக்கு எதிராக 943 முறைப்பாடுகள்

Report Print Rakesh in சமூகம்

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் 943 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியர் ஷாபி சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இந்தநிலையில், அவருக்கு எதிரான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

குருணாகல் மற்றும் தம்புள்ளை ஆகிய வைத்தியசாலைகளில், வைத்தியர் ஷாபியிடம் சிசேரியன் சத்திர சிகிச்சை செய்துகொண்ட தாய்மார்களே தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல், குறித்த முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தினமும் வைத்தியசாலைகளுக்குத் தாய்மார் வருகைதந்து முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Latest Offers