தீவிரவாதி அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள அறிக்கை! நீதிபதி விடுத்துள்ள உத்தரவு

Report Print Murali Murali in சமூகம்

தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட முஹம்மட் அஸாம் முஹம்மட் முபாரக் அல்லது அப்துல்லா என்பவர் 2014 ஆம் ஆண்டில் இருந்து தேசிய தௌஹூத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தாக்குதலை நடத்திய முஹம்மட் அஸாம் முஹம்மட் முபாரக் அல்லது அப்துல்லா 2014ம் ஆண்டில் இருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பில் இணைந்து செயற்பட்டமை தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பயங்கரவாதி உட்பட மேலும் சிலர் எந்தேரமுல்ல மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் நுவரெலியாவில் அமைந்துள்ள முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு கோட்டை பதில் நீதவான் ஜயந்த நாணக்கார, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers