திருகோணமலையில் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய மற்றும் 42 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை திருகோணமலை மற்றும் மூதூர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers