ஹட்டனிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

நாடளாவிய ரீதியில் இ.போ.ச பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹட்டனிலும் இன்று காலை எட்டு மணி முதல் வேலைநிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிலுவை பணம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு தொடர்பில் வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் ஹட்டன், கொழும்பு, நுவரெலியா, கண்டி, மஸ்கெலியா, பொகவந்தலாவ, தலவாகலை, டயகம மற்றும் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் இ.போ.சபைக்கு சொந்தமான 90 பேருந்துகளின் சாரதிகளும், நடத்துனர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதுடன், தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

Latest Offers