கத்திக்குத்திற்கு இலக்கான பல்கலைக்கழக மாணவி! காதலன் கைது?

Report Print Satha in சமூகம்

பல்கலைக்கழக மாணவியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை களனி பல்கலைக்கழகத்தின் அருகில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அவர் காதலராக இருக்கலாம் என கூறுகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் இடம்பெற காதல் விவகாரமே காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Latest Offers