விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

மகாவலி கங்கையில் இருந்து கொழும்பிற்கு சட்ட விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிச் சென்ற சாரதிகள் இரண்டு பேர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு - மலல சேகர மாவத்தையைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மணல் ஏற்றிச்செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதன் சட்ட விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மணல் ஏற்றிச் செல்லப்பட்ட லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரண்டு பேரையும் இன்று கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest Offers