கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

அம்பாறை - கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய பெண் அதிபரை இடைநிறுத்தி புதிய அதிபரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நேற்று கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தினை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பாடசாலையின் பெற்றோர் சங்கத்தினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய பெண் அதிபர் கடமையில் இடைநிறுத்தப்பட்டு புதிய அதிபரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பாடசாலையின் புதிய அதிபரை மாற்றி, இடைநிறுத்தப்பட்ட பெண் அதிபரை மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும், பாடசாலையில் பணியாற்றும் 3 ஆசிரியர்களை பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தின் இறுதியாக மகஜரொன்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் வலயக்கல்வி பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Latest Offers