திருகோணமலையில் குளங்களை புனரமைக்க நடவடிக்கை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மொரவெவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் யுத்த காலப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற குளங்களை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமி தெரிவித்துள்ளார்.

மொரவெவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற குளங்களை பார்வையிடுவதற்காக இன்று பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமி உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.

மொரவெவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற அனைத்து குளங்களின் விபரங்களையும் பெற்று திட்ட ஆலோசணை பற்றிய அறிக்கைகளை நீர்ப்பாசன திணைக்களங்கள் மற்றும் கமநல சேவைகள் திணைக்களங்களுக்கு வழங்கி எதிர்காலத்தில் குளங்களை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் ரொட்டவெவ பகுதியில் மிரிஸ்வெவ, இலுப்பைக்குளம், நாவல் குளம், நொச்சிகுளம் போன்ற குளங்களை பார்வையிட்டதாகவும் மிக விரைவில் இக்குளங்களை புனரமைக்க நிதிகளை பெற்று விவசாயிகள் நலன்கருதி மிக விரைவில் புனரமைப்பு வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers