இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தத்தின் பின் இயங்குவதை நிறுத்திய முக்கிய சாட்சியம்

Report Print Sujitha Sri in சமூகம்

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி யேசுநாதர் உயிர்த்ததை கொண்டாடும் வகையில் புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியாக தேவாலயங்களை நாடியிருந்தனர் கிறிஸ்தவ மக்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் அன்றைய தினம் 8.45 மணி முதல் இலங்கையர்கள் அனைவரும், ஒருபோதும் எதிர்பார்த்திராத அதிர்ச்சி சம்பவங்களை கேள்வியுற்றனர்.

அடுத்தடுத்து மூன்று தேவாலயங்கள் உட்பட எட்டு இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த சம்பவங்களில் சுமார் 250 பேரின் உயிர்கள் காவு வாங்கப்பட்டிருந்தன. குறித்த தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடந்து இரு மாதங்களாகவுள்ளன. ஆனால் எம் உறவுகள் மனதில் ஏற்பட்ட வடு எப்போது மாறும்?

தமது உறவுகள் இரத்த வெள்ளத்தில் சிதறிய உடலுடன் கிடந்த காட்சியை அவ்வளவு எளிதில் பாதிக்கப்பட்டவர்களின் மனக்கண்ணிலிருந்து அழித்து விட முடியுமா?

கொடிய துயருக்கு சாட்சியாகியுள்ளன இலங்கையின் குறித்த எட்டு இடங்கள். அந்த வகையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சம்பவம் இடம்பெற்ற அன்று, அதுவும் குண்டுத்தாக்குதல் சம்பவம் பதிவான 8.45 மணிக்கு ஆலயத்தின் கடிகார முற்கள் நின்று விட்டன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சேதத்திற்கு உள்ளான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் திறக்கப்பட்ட போதும் உச்சகட்ட வேதனையின் சாட்சியாய் 8.45 என்ற நேரத்திலேயே நிற்கின்றன ஆலய கடிகாரத்தின் முற்கள்.

யார் என்ன தெரிவித்தாலும், குண்டுத்தாக்குதல்கள் எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பில் தகவல் வழங்கினாலும் கூட 8.45 மணிக்கு இடம்பெற்ற பேரனர்த்தத்தின் பின்னர் இயங்குவதை நிறுத்திக் கொண்டு முக்கிய சாட்சியமாக காணப்படுகிறது இந்த கடிகாரம்.

வீடியோ - சினன்

Latest Offers