கிழக்கு மாகாணசபையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்! இரா.துரைரெட்னம்

Report Print Kumar in சமூகம்

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் புதிய ஆளுநர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், கிழக்கு மாகாணசபையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் எனவும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் இன விகிதாசாரம் பேணப்படாமல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அவற்றினை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரி்க்கையையும் முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் அது தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுடன் அந்த விடயங்களை கையாளவேண்டுமே தவிர ஒரு பக்கச்சார்பாக ஜனாதிபதி அதனை நிறுத்துவது என்பது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிப்பதற்கு சமனாகும்.

ஒரு நாட்டில் ஒரு சம்பவம் நடைபெறும் போது அந்த சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்ற வகையிலேயே இவ்வாறான தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு இல்லாமல் உண்மையான குற்றவாளிகள் விசாரணை செய்யப்பட்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கவேண்டிய நிலையினை நிறைவேற்றுவதே ஒட்டு மொத்த இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் சடலத்தினை மட்டக்களப்பில் புதைக்க எடுக்கும் நடவடிக்கை இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடுகளா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers