தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை

Report Print Sindhu Madavy in சமூகம்

யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த மீனவர்கள் பருத்தித்துறை நீதவான் நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் மூன்று படகுகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன, சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, குறித்த மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தால், இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காது அவர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் பரிந்துரை செய்திருந்ததாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் கூறினார்.

பருத்தித்துறை நீதவான் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் 18 பேரையும் விடுதலை செய்துள்ளார்.

குறித்த மீனவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படிருந்தனர்.

மேலும் அவரகள் காரைக்கால் பகுதியை சேர்ந்த 18 மீனவர்களும் மூன்று படகுகளுடன் கைது செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers