யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் - அடையாளம் காட்டிய பெற்றோர்

Report Print Tamilini in சமூகம்

யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்து ஒன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞனை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞனை அவரது பெற்றோர் இன்று அடையாளம் காட்டினர்.

கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த 19 வயதான தர்மானந்தசிவம் நித்திலன் என்ற இளைஞன் விபத்து காரணமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த குறித்த இளைஞனை வைத்தியசாலையில் சேர்ந்தவர்கள் எந்தவித தகவல்களையும் வழங்காமல் சென்றுள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் முழுமையாக சுயநினைவற்ற நிலையில் தனது பெயரை மித்திரன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சத்திரசிகிச்சைக்காக சத்திரசிகிச்சை கூடத்துக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரை அடையாளம் காண உதவுமாறு கோரப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த அவரது பெற்றோர் மகனின் சடலத்தை அடையாளம் காட்டினர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உடற் பரிசோதனையின் பின் சடலத்தை தந்தையாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

Latest Offers