குண்டுத் தாக்குதலை இஸ்லாமிய இனவாதிகள் தான் மேற்கொண்டார்கள் என்பதினை கூற யாரும் பயப்பட தேவையில்லை!

Report Print Dias Dias in சமூகம்

கடந்த ஏப்ரல் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை இஸ்லாமிய இனவாதிகள் தான் மேற்கொண்டார்கள் என்பதினை கூற யாரும் பயப்பட தேவையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்து பௌத்த கலாசார பேரவையில் 2ம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது மேலும் அவர் கூறுகையில்,

பௌத்தர்களின் புனித தளமான தளதா மாளிகை தாக்கப்பட்ட போது கூட நாங்கள் இந்து ஆலயங்களை தாக்க சொல்லவில்லை.இதனை அரசியல் பின்புலமாகவே பார்வையிட்டோம்.

அரபு மொழியை கற்பிப்பதற்கான தனிப்பட்ட ரீதியில் ஹிஸ்புல்லா சவுதி அரேபியாவின் உதவியைக் கொண்டு மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தினை பல மில்லியன் தொகையைக்கொண்டு அமைத்துள்ளார்.

இதற்கு யார் நிதியினை வழங்கியுள்ளார்கள் என்பதினை பார்ப்போமானால் அது சவுதி அரேபியாவிலிருந்து பெறப்பட்டதேயாகும்.

தனிப்பட்ட ரீதியில் இயங்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தினை தொழிற்பயிற்சி மத்திய நிலையமாக, அனைத்து இனங்களுக்கும் பயன்பெறும் வகையில் மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எந்த அரசு வந்தாலும் மேற்கொள்வோம் என்பதினை இந்த யாழ். மண்ணில் வைத்து தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் அரபு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் 2016ம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டபோது அது தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என குறிப்பிடப்பட்டது.

குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கருத்தடை காரணமாக தாய்மார்கள் குழந்தையின்றி தவிக்கும் நிலையேற்பட்டுள்ளமை கவலைக்குறியது.

திருகோணமலையில் இயங்கும் அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் தமிழ் ஆசிரியர்களுக்கு தொழில் இல்லை ஆனால் அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் தமிழ் பாடசாலைகளில் தொழில் வழங்கப்பட்டுள்ளது.

ஏன் தமிழ் ஆசிரியர்களுக்கு திறமையில்லையா என ஹிஸ்புல்லாவிடம் கேள்வி கேட்கின்றேன். மேலும் கல்வி அமைச்சு இது குறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்கள்,சிங்களவர்கள் ஒன்றினைந்து இஸ்லாமிய இனவாதிகளை இல்லாதொழித்து நாட்டின் அபிவிருத்தியை முன்னேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers