தோப்புக்காடு பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - காரைநகர் ,தோப்புக்காடு பகுதிக்கு சென்ற கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று மக்கள் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

தோப்புக்காடு, மருதபுரம், பலகாடு, இலகாடு கிராமங்களிற்கு விஜயம் மேற்கொண்டு அப்பகுதி மக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

குறித்த சந்திப்பானது தோப்புக்காடு முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்றதுடன், மக்கள் சந்திப்பின் போது தோப்புக்காடு பகுதி மக்களினால் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த கோரிக்கைகளுக்கு அமைய இளைஞர் ,யுவதிகளின் வேலை வாய்ப்பு, வீடுகள் இல்லாத தோப்புக்காடு பகுதியை சேர்ந்த மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலம் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான வீடுகள், குடிநீர் வசதிகள், செப்பனிடப்படாத வீதிகளை செப்பனிடுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை செய்து வருவதாக இதன்போது உறுதியளித்துள்ளார்.

மேலும் தோப்புக்காடு கிராமத்தில் ரணசிங்க பிரேமதாசவினால் வழங்கப்பட்ட பல வீடுகள் சேதமடைந்து காணப்படுவதால், அவற்றை திருத்தி தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக அந்த வீடுகளின் விபரங்களினை கிராம சேவையாளரிடம் பதிவு செய்யுமாறும், அதற்குரிய நிதியினை தான் தேசிய வீடமைப்பு அமைச்சின் ஊடாக பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது தோப்புக்காடு பகுதி மக்கள், தோப்புகாடு பகுதி மாதர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தோப்புகாடு கிராம சேவகர் என பலரும் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers