வவுனியாவில் ஞாபகார்த்த மென்பந்து சுற்று வெற்றிக்கிண்ணம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தமிழர்கள் வாழும் எல்லைக்கிராமங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நினைவுக்கிண்ணம் இந்த வருடமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மருதோடை சென்சுடர் விளையாட்டுக் கழக விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 22,23ஆம் திகதிகளில் மென்பந்து சுற்று நினைவுக்கிண்ணம் நடைபெறவுள்ளது.

அணிக்கு 11 பேர் என்ற வகையில் 8 அணிகள் பங்குபெறும் லீக் முறையிலான குறித்த மென்பந்து சுற்றுப்போட்டியில் வெற்றிபெறும் முதலாம், இரண்டாம் அணிகளுக்கு பெறுமதியான வெற்றிக்கிண்ணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers