ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Ajith Ajith in சமூகம்

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.

இது 2018 ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இது வழங்கப்படவுள்ளது

இதேவேளை அரச ஊழியர்களுக்கு 2020ஆம் ஆண்டு 107 வீதத்தினால் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அதிகரிப்புக்களுக்காக 2019ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தில் 12 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதன்கீழ் ஏற்கனவே ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு 2800 ரூபா முதல் 20ஆயிரம் ரூபா வரையில் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.

தரம்1 இளைப்பாறிய ஆசிரியர்களுக்கு 9200 ரூபாவாலும் இளைப்பாறிய தாதியர்களுக்கு 9200 ரூபாவாலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இளைப்பாறிய காவல்துறை பரிசோதகர்களுக்கு 4200, இளைப்பாறிய சிரேஸ்ட நிறைவேற்று அலுவலர்களுக்கு 16000 ரூபா, இளைப்பாறிய அமைச்சின் செயலாளர்களுக்கு 20000 ரூபா என்ற அடிப்படையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.