இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்துக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதியாக இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி கண்டது.

இதனையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதற்கு இலங்கை அணி மறுத்துவிட்டது.

இந்த செயல் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் இலங்கை அணியின் முகாமையிடம் விளக்கம் கோரவுள்ளது.

ஏற்கனவே, ஏனைய அணிகளுக்கு கிடைக்கும் வசதிகள் தமக்கு கிடைக்கவில்லை. தமது அணி பாரபட்சமாக நடத்தப்படுகிறது என இலங்கை அணியின் முகாமை முறையிட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.